கோலாலம்பூர், அக்டோபர்.29-
கம்போடியாவில் மனிதக் கடத்தல் கும்பலிடம் சிக்கி மீட்கப்பட்ட 36 வயதான மலேசியர் ஒருவர், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தான் மிகுந்த சித்ரவதைக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளார்.
'ஜோ' என்று அழைக்கப்படும் அவர், சாத்தே தயாரிப்பாளராகப் பணியாற்ற, கம்போடியாவுக்குச் சென்றதாகவும், தனக்கு மாதம் 6,300 ரிங்கிட் ஊதியம் அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம், அங்கு சென்ற பின்னரே, தான் மனிதக் கடத்தல் கும்பலிடம் சிக்கியது அவருக்குத் தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவ்விடத்தில், உணவாக பன்றி இறைச்சி வழங்கப்பட்டு, தினமும் மின்சாரம் கொண்டு தாக்கி சித்ரவதை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாதம் 50,000 ரிங்கிட் முதல் 1 லட்சம் ரிங்கிட் வரையில் இணைய மோசடி வேலைகள் செய்வதற்காகத் தாங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மலேசிய வெளியுறவுத் துறையின் முயற்சியால் இதுவரை 5 மலேசியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.








