Jul 29, 2026
Thisaigal NewsYouTube
6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு வழிவிடப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு வழிவிடப்பட வேண்டும்

Share:

கிளந்தான், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தலுக்கு வகை செய்யப்பட்டதைப் போல பெர்சத்து கட்சியின் 6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு மக்களவை சபா நாயகர் வழிவிட வேண்டும் என்று அக்கட்சி, இன்று கடிதம் அனுப்பியுள்ளது.

முசாங் குகை, புக்கிட் கந்தாங், தஞ்சங் கராங், ஜெலி, குவாலா கங்சார் மற்றும் லாபுவான் ஆகிய 6 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு வழிவிடும் வகையில் அத்தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை குறித்து சபா நாயகர் ஜோஹாரி அப்துல் முடிவு செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பகிரங்கமாக தங்கள் ஆதரவை நல்கியதற்காக அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெர்சத்து கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கட்சியை பிரதிநிதித்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஒருவர், கட்சி விட்டு கட்சி மாறினாலோ அல்லது சொந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலோ அவர், இயல்பாகவே நாடாளுன்ற உறுப்பினர் தகுதியை இழக்கிறார் என்று கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 49 A விதி கூறுகிறது என்று பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் Ronald Kiandee தெரிவித்துள்ளார்.

எனவே மேற்கண்ட சட்டத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியை அடுத்த 21 நாட்களுக்குள் காலி செய்தாக வேண்டும். அந்த 6 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு வழிவிடப்பட வேண்டும்.

இதற்கு மக்களவை சபா நாயர் Johari Abdul ஓர் ஆணைப் பிறப்பிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக Ronald Kiandee குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்