கூச்சிங், செப்டம்பர்.20-
சரவாக்கில், “சாண்டுபாங்” என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த உள்ளூர் பியர் ஒன்று சர்ச்சைக்குள்ளாகி திரும்பப் பெறப்பட்டது, அம்மாநிலத்திற்கே பின்னடைவு என சரவாக் டிஏபி தலைவர் சோங் சியேங் ஜேன் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையால், சரவாக் மாநிலம், தனது சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் ஒரு பகுதியை இழந்தது போல் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாண்டுபாங் என்ற பெயருடன் உள்ளூர் தயாரிப்பான அந்த பியர், சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர் நான்சி ஷுக்ரி மற்றும் அவரது தொகுதி மக்களால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து அதன் விற்பனை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அந்த பியருக்கு சாண்டுபாங் என்று பெயர் சூட்டியதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அது சராவாக்கின் அடையாளத்தையே மேம்படுத்துகிறது என்றும் சோங் வலியுறுத்தியுள்ளார்.








