Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஒரு காபிக் கடையும் ஒரு வீடும் தீ பிடித்து எரிந்தன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒரு காபிக் கடையும் ஒரு வீடும் தீ பிடித்து எரிந்தன

கம்புங் பாரு, டிச.4-

இன்று, கம்புங் பாரு சுங்கை பலோவ், Jalan Wellfareஇல் ஒரு காபிக் கடையும் ஒரு வீடும் தீ பிடித்து எரிந்தன.
சிலாங்கூர் மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் செயல்பாட்டு பிரிவின் துணை இயக்குநர் அஹமட் முக்ளிஸ் முக்தார் கூறுகையில், இன்று காலை 9.26 மணிக்கு தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் குறிப்பிட்டார்.
தீ ஏற்பட்ட கடை 30 விழுக்காடும் அருகில் உள்ள வீடு 80 விழுக்காடும் எரிந்ததாக அவர் தெரிவித்தார்.
காலை 9.50 மணிக்கு தீ கட்டுப்படுத்தப்பட்டது. தீ ஏற்பட்ட காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →