பாச்சோக், பந்தாய் கோலா கெமாசின் பகுதியில் கடந்த வியாழக்கிழமை தெருநாய்கள் கூட்டமாக தாக்கியதில் படுகாயமடைந்த 8 வயது சிறுவனுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு, மூன்று வாரங்களுக்கு அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிறுவனின் தாயார் 46 வயதான ரோஸ்னானி மாட் சாலே கூறுகையில், நாய்கள் கடித்து இரண்டு நாட்களாக அதிர்ச்சியில் இருந்த தனது மகன் அஸுவார் ஃபிர்டாவுஸ் ஸுராய்மான் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயங்களால் வலி இருந்ததால், அவர் பயத்தில் யாரிடமும் பேசாமல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலை முன்னேறியுள்ளதுடன், மீண்டும் பேசத் தொடங்கியுள்ளதாக ரோஸ்னானி தெரிவித்துள்ளார்.








