Oct 17, 2026
Thisaigal NewsYouTube

இருவர் குத்தக்கொலை: சந்தேகப்பேர்வழிக்கு 7 நாள் தடுப்புக்காவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இருவர் குத்தக்கொலை: சந்தேகப்பேர்வழிக்கு 7 நாள் தடுப்புக்காவல்

ஜார்ஜ்டவுன். நவ.8-


காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த பெண்ணையும், அவரின் தந்தையும் கத்தியால் குத்தி, கொலை செய்த 32 வயது ஆடவர், விசாரணைக்கு ஏதுவாக 7 நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றனர்.

பினாங்கு, பண்டார் பாரு ஆயர் ஹீத்தாம், லெங்கே அங்சானாவில் ஓர் அடுக்கமாடி வீட்டின் கீழ் தளத்தில் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 30 வயது பெண்ணும், 62 வயது தந்தையும் உயிரிழந்தனர்.

இருவரையும் குத்தி கொலை செய்ததாக நம்பப்படும் அந்த அந்த ஆடவர், தன்னைத் தன்னை பலமுறை கத்தியால் காயப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து அந்த ஆடவர் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்க கொண்டு செல்லப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பெற்று வரும் அவரால் நீதிமன்றத்திற்கு வர இயலாததால் மருத்துமனையில் இருந்தப்படியே அந்த நபரை தடுத்து வைப்ப தற்கான ஆணையை போலீசார் பெற்றுள்ளதாக பினாங்கு மாநில போலீசார் இன்று காலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →