Mar 29, 2026
Thisaigal NewsYouTube
பல்பொருள் அங்காடியில் பொருட்களைக் களவாடிய குடும்பத்தினர் கைது
தற்போதைய செய்திகள்

பல்பொருள் அங்காடியில் பொருட்களைக் களவாடிய குடும்பத்தினர் கைது

Share:

மூவார், மே.27-

ஜோகூர், மூவாரில் உள்ள ஒரு பல்பொருள் பேரங்காடியில் தள்ளுவண்டி நிறைய பொருட்களைத் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், அந்த பேரங்காடியில் வேலை செய்யும் பணியாளர் ஆவார். தனது குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் களவாடியப் பொருட்களை முகப்பிடத்தில் ஸ்கேன் செய்வது போல் நடித்து, அந்த நபர், குடும்ப உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதி அளித்து இருப்பதாக நம்பப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் மற்றொரு பணியாளர், அந்த தள்ளுவண்டியைத் தடுத்து நிறுத்தி, ரசீதைக் கேட்ட போது அவர்களால் பதில் ஏதும் சொல்ல முடியாத நிலையில் அவ்விடத்திலேயே அவர்கள் தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவம் கடந்த மே 14, 24 மற்றும் 25 ஆம் தேதி ஆகிய மூன்று தினங்களில் நிகழ்ந்துள்ளன. இதனால் அந்த பேரங்காடிக்கு மொத்தம் மூவாயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி