Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜப்பானில் இருந்து மீன்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை
தற்போதைய செய்திகள்

ஜப்பானில் இருந்து மீன்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை

Share:

ஜப்பானில் இருந்து விவசாயம் மற்றும் கடல் உணவு சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்யும் எந்த நடவடிக்கைக்கும் அரசாங்கம் தடை விதிக்காது என விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் முகம்மட் சாபு தெரிவித்தார்.

கதிரியக்க சோதனை உட்பட உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகளை சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஜப்பான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் பிடி - கடல் உணவுப் பொருட்கள் உண்பதற்கு பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், ஜப்பானில் இருந்து வரும் எந்தவொரு கடல் உணவுக்கும் நான்காவது கட்ட அதிகமான பாதுகாப்பு அளவை அமல்படுத்துவதால் ஜப்பானில் இருந்து வரும் எந்த மீனையும் கவலை இன்று உட்கொள்ளலாம் என ஜப்பானின் விவசாயம், வனத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சருடன் இருதரப்பு சந்திப்பை நடத்திய பின்னர் முகம்மட் சாபு கூறினார்.

Related News