Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கம்போங் சுங்கை பாருவில் மலாய்க்காரர்களுக்கு மலிவு விலையில் வீடுகள் வழங்கப்பட வேண்டும் - ஜொஹாரி வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

கம்போங் சுங்கை பாருவில் மலாய்க்காரர்களுக்கு மலிவு விலையில் வீடுகள் வழங்கப்பட வேண்டும் - ஜொஹாரி வலியுறுத்தல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

கம்போங் சுங்கை பாருவில் உள்ள மலாய்க்காரர்களுக்கு மலிவு விலையில் வீடுகளைக் கட்டித் தருமாறு திதிவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி கானி வலியுறுத்தியுள்ளார்.

அவர்கள் வாழும் அந்நிலம், சிலாங்கூர் சுல்தானால் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது என்பதால், அங்கிருக்கும் அசல் குடியிருப்பாளர்களுக்கு, நியாயமான விலையில் வீடுகளை விற்குமாறு வீட்டு வசதி மேம்பாட்டாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே வேளையில், கம்போங் சுங்கை பாரு மறுசீரமைப்பு விவகாரம் பல வருடங்களாக சர்ச்சைக்குள்ளாகி, தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதால், தான் இது குறித்து மேலும் விளக்கத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்விவகாரம் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமையும், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாஃபாவையும் சந்தித்து, அப்பகுதியில் மலாய்க்காரர்கள் மட்டுமே வீடுகளை வாங்க அனுமதியளிக்குமாறு தான் கேட்டுக் கொள்ளப் போவதாகவும் ஜொஹாரி கானி தெரிவித்துள்ளார்.

Related News