பகாங், பெந்தோங் வட்டாரத்தில் கடந்த 10 நாட்களாக காணவில்லை என்று புகார் செய்யப்பட்டுள்ள 91 வயதுடைய ஓர் இந்திய முதியவரை தேடிக் கண்டு பிடிக்க போலீசார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஆர். மதிவாணன் என்று அந்த முதியவர், வீடு திரும்பாதது குறித்து கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அந்த முதியவரின் மகன் போலீசில் புகார் செய்துள்ளதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுபெரிதென்டன் சைஹான் முஹமாட் காஹார் தெரிவித்தார்.
வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சைஹான் முஹமாட் காஹார் குறிப்பிட்டுள்ளார்.








