Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூர் கொடியைத் தலைகீழாகக் கட்டியதற்காக பசார் ராயாவை 30 நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் கொடியைத் தலைகீழாகக் கட்டியதற்காக பசார் ராயாவை 30 நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவு

Share:

பொந்தியான், ஆகஸ்ட்.26-

ஜோகூர், பொந்தியான், பெக்கான் நநாஸில் ஜோகூர் மாநிலக் கொடியைத் தலைகீழாகக் கட்டியதற்காக பசார் ராயா ஒன்றை 30 நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வர்த்தகத்தளம் அடுத்த 30 நாட்களுக்குச் செயல்படக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கடிதம், அதன் நிர்வாகத்திற்கு நேற்று வழங்கப்பட்டு விட்டதாக பொந்தியான் நகராண்மைக்கழகத் தலைவர் அப்துல் அஸிம் ஷம்சுடின் தெரிவித்தார்.

ஜோகூர் மாநிலக் கொடியைத் தலைகீழாகக் கட்டியது மூலம் அந்த வர்த்தகத் தளம், 2019 ஆம் ஆண்டு மாநில வர்த்தகச் சட்ட விதிகளை மீறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் சம்பந்தப்பட்ட வர்த்தகத் தள நிர்வாகம், இது குறித்து மேல்முறையீடு செய்யலாம் என்று அவர் விளக்கினார்.

Related News