Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

Share:

ஷா ஆலாம், மே.18-

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையமான கேஎல்ைஏ முனையம் மற்றும் அம்பாங் ஜெயா பகுதிகளில், கடந்த மே 6 முதல் 11-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் நான்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளில் மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஓர் உள்ளூர் ஆடவர், 3 வெளிநாட்டு ஆடவர்கள் மற்றும் 3 வெளிநாட்டுப் பெண்களும் அடங்குவர்.

மேலும், மேற்கொள்ளப்பட்ட இந்த நான்கு சோதனைகளில் 172.8 கிலோ கஞ்சா மற்றும் 79 கிலோ methamphetamine வகை போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் மொத்த எடை 251.8 கிலோ என்றும், அதன் மதிப்பு சுமார் 17.8 மில்லியன் ரிங்கிட் என்றும் ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்