Oct 16, 2026
Thisaigal NewsYouTube

போலீசாரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீசாரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது

கம்போங் காஜா, டிச.23-


பேரா, கம்போங் காஜா, ஜாலான் உத்தாமா சங்காட் லாடாவில் உள்ள ஆற்று மதுகுவில் குளித்துக்கொண்டு இருந்த போது, நீரோட்டத்தின் வேகத்தில் அடித்துச்செல்லப்பட்ட போலீஸ்காரர் ஒருவரின் உடல், இன்று திங்கட்கிழமை காலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

39 வயதுடைய அந்த போலீஸ்காரரின் உடல், போஸ் கவாலான் போம்பாவிலிருந்து 3.04 மீட்டர் தூரத்தில் ஆற்றோரத்தில் ஒதுங்கிகிடந்தது, அதிகாலை 4.55 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் சபாரோட்ஷி நோர் அகமட் தெரிவித்தார்.

ஆற்றிலிருந்து Bucket Stretcher மூலம் அந்த ஆடவர் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நேற்று காலையில் நண்பர்களுடன் அந்த போலீஸ்காரர் உல்லாசமாக குளித்துக்கொண்டு இருந்த போது நீரின் வேகத்தில் அளித்து செல்லப்பட்டதாக சபாரோட்ஷி நோர் அகமட் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →