கோலாலம்பூர், ஆகஸ்ட்.10-
பினாங்கில் தேசியக் கொடியைத் தலைகீழாக ஏற்றிய விவகாரத்தில், ‘கலங்கிய நீரில் மீன் பிடிக்க வேண்டாம்' என அனைத்துத் தரப்பினருக்கும் டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடைக்குச் சென்று போராட்டம் நடத்தப் போவதாக அச்சுறுத்துவதும், கொடியை எப்படி ஏற்றுவது என 'கற்றுக் கொடுக்கப் போவதாகக்' கூறுவதும் ஒருவகை அச்சுறுத்தல் நடவடிக்கை என அவர் விமர்சித்தார்.
மலேசிய மக்கள் இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளை ஒரு போதும் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து காவல்துறை ஏற்கனவே விசாரித்து வரும் நிலையில், இதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.








