சோதனை செய்வதற்காக நிறுத்தப்பட்ட தாய்லாந்து எண் பலகைப் பொருத்தப்பட்டிருந்த ஹொன்டா சிவிக் வாகனம் பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ்காரர்களை மோதி, தப்பியோடிய அவ்வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் அந்த காரில் பயணித்த இரு ஆடவர்களில் ஒருவர் போலீசாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்த 36 வயதுடைய ஆடவர் மீது, ஏற்கெனவே போதைப்பொருள் உட்பட 24 குற்றச்செயல்கள் பதிவாகி இருப்பத்தாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வான் ஹாசான் வான் ஹாமாட் .
நேற்று புதன்கிழமை மாலை 3 மணியளவில், கூலிம், பொன்டோ லபுவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அந்த வாகனத்தைச் சோதனை செய்ததில் ஷாபு வகை போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வான் ஹாசான் குறிப்பிட்டார்.








