Jul 1, 2026
Thisaigal NewsYouTube
படிவம் 6 மாணவர்களுக்கும் மாத உதவித்தொகை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

படிவம் 6 மாணவர்களுக்கும் மாத உதவித்தொகை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

Share:

மெட்ரிகுலேஷன் மாணவர்களைப் போலவே, படிவம் 6 மாணவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஜோகூர்பாருவில் உள்ள தெமெங்கோங் இப்ராகிம் ஆசிரியர் பயிற்சி கழகத்திற்கு வருகை புரிந்த பிரதமர், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் ஆறாம் படிவ மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் போது இதனை தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வியில் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆறாம் படிவ மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போது மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கு மாதம் 250 வெள்ளி உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், அதே போன்ற நிதி உதவியைப் படிவம் 6 மாணவர்களுக்கும் வழங்குவதற்கு கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதான அவர் சுட்டிக்காட்டினார்.

படிவம் 6 நிர்வாகம் உயர்கல்வி அமைச்சின் கீழ் மாற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கான அமலாக்க நடைமுறைகள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் இரு தரப்பு மாணவர்களும் சமமான வசதிகளையும் உபகாரச் சம்பள வாய்ப்புகளையும் பெறுவார்கள் என்றும் பிரதமர் உறுதி அளித்தார்."

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை