நேற்று மாலை 5 மணியளவில் இங்குள்ள கம்போங் செரி கெனாங்கா னில் நடந்த சம்பவத்தில் நஞ்சு கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு விவசாயியின் 16 நாட்டு மாடுகள் இறந்தது. ஏறத்தாழ 40 ஆயிரம் வெள்ளி நட்டம் ஏற்பட்டது.
62 வயது விவசாயியான முகமட் சாட் தெரிவிக்கயில், கம்பத்துவாசி ஒருவர் தனது தோட்டத்திற்குச் செல்லும் வழியில் அந்த 16 மாடுகளின் வாயில் நுரை தள்ளி இருப்பதைப் பார்த்திருப்பதாகக் கூறினார்.
தமது மாடுகளுக்கு நஞ்சு கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் 3 பிப்பாய்கள் அருகில் கண்டெடுக்கப்பட்டதையும் முகமட் சாட் தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து தாம் காவல் துறையில் புகார் அளித்து இருப்பதாகவும் கால் நடை மருத்துவரிடமும் பேசி வருவதாக்வும் அவர் சொன்னார்.








