Dec 3, 2025
Thisaigal NewsYouTube
எட்டு வெளிநாட்டுப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

எட்டு வெளிநாட்டுப் பெண்கள் கைது

Share:

ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் வெளிநாட்டைச் சேர்ந்த எட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பினாங்கு, ஜார்ஜ்டவுனில் உள்ள பட்ஜெட் ஹோட்டல்கள், பிரமுகர்கள் தங்கும் வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி வீட்டுப்பகுதிகளில் போலீசார் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 25 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நிய நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டதாக பினாங்கு, திமூர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் சோஃபியன் சாண்டோங் தெரிவித்தார்.

தவிர சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டுப் பெண்கள் ஒழுங்கீன நடவடிக்கைக்கு பயன்படுத்திய சாதனங்கள் மற்றும் 2,200 வெள்ளி ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News