கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-
அரச மலேசிய போலீஸ் படையின் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் புதிய சிஐடி இயக்குநராக கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார்.
புக்கிட் அமான் இடைக்கால சிஐடி இயக்குநர் துணை கமிஷனர் டத்தோ ஃபாடில் மார்சுஸுக்கும், கமிஷனர் டத்தோ குமாருக்கும் இடையில் பதவி ஒப்படைப்புச் சடங்கு, போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் முன்னிலையில் புக்கிட் அமான் தலைமையகத்தில் நடைபெற்றது.
ஜோகூர் மாநில போலீஸ் தலைவராகப் பதவி வகித்து வந்த கமிஷனர் டத்தோ குமார், புக்கிட் அமானின் சிஐடி இயக்குநராக நியமிக்கப்பட்டு இருப்பது அவரின் பரந்த அனுபவத்தின் அடிப்படையில் பொருத்தமானது என்று ஐஜிபி சிஐடி இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் தெரிவித்தார்.








