May 21, 2026
Thisaigal NewsYouTube
இந்து அறப்பணி ஓர் அறவாரியத்தை அமைக்கத் திட்டம்
தற்போதைய செய்திகள்

இந்து அறப்பணி ஓர் அறவாரியத்தை அமைக்கத் திட்டம்

Share:

ஆஎஸ்என் ராயரை தலைவராக கொண்டு செயல்படும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம், பினாங்கு மாநிலத்தை சேர்ந்த வசதியற்ற இந்துக்களுக்கு உதவும் வகையில் விரைவில் அறவாரியம் ஒன்றை அமைக்கவிருப்பதாக அதன் துணைத் தலைவரும், செனட்டருமான டாக்டர் ஆர். லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

உயர் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் இந்து மாணவர்களுக்கும், சிரமத்தில் உள்ளவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின கீழ் இந்த அறவாரியம் அமைக்கப்படும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பினாங்கு ஆளுநரை சந்தித்து, உரிய ஆலோசனையைப் பெற்றதாகவும், ஆளுநரும் இத்திட்டத்திற்கு தமது ஆதரவை நல்கியிருப்பதாகவும் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

முன்னதாக, பினாங்கை சேர்ந்த மாணவன் டிரென் ராஜரத்னம்மிற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சார்பில் 2 ஆயிரம் வெள்ளி நிதி உதவி வழங்கப்பட்டது. டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் இதர ஆணையர்கள் முன்னிலையில் அத்தொகைக்கான காசோலையை மாணவனின் தந்தை ராஜரத்தினம், பெற்றுக்கொண்டார்.

ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில் தலைசிறந்து விளங்கும் மாணவன் டிரென் ராஜரத்னம்மிற்கு, தற்போது நியூயோர்க்கில் வில்லியம் ஸ்மித் கல்லூரியில் பயன்று வருகிறர்.

வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாபெரும் Squash போட்டியில் பங்கேற்கவிருக்கும் அந்த மாணவருக்கு உதவும் வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சார்பாக இந்த நிதி உதவி, அவரின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாக டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்