மலாக்கா, டிசம்பர்.31-
மலாக்கா, சுங்கை ஊடாங் பகுதியில் உள்ள சிறப்பு போர் பயிற்சி மையத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர், பாராசூட் பயிற்சி நடவடிக்கையின் போது காயமடைந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளேபாங், பாடாங் என்கோர் பகுதியில் நடைபெற்ற இந்த பயிற்சி நடவடிக்கையின் போது, 32 வயதான சையிட் அஸாயுஸில் அஃபிஃபி சையிட் அஸிஸ் என்ற வீரர் காயமடைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.
தற்போது அவர் மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இராணுவத்தின் 60-வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக, இந்த பாராசூட் பயிற்சியானது மேற்கொள்ளப்பட்டதாகவும் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.








