Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கடலில் மூழ்கி ஆடவர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடலில் மூழ்கி ஆடவர் மரணம்

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 07-

பினாங்கு பாண்டாய் தஞ்சோங் டோகாங் கடற்கரையில் குளித்துக்
கொண்டிருந்த ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 44 வயது A. சேகர் என்று அடையாளம் கூறப்பட்ட நபரின் உடல் மாலை 6.34 மணியளவில் கடற்கரையில் இருந்து சுமார் 50 மீட்டர்
தொலைவில் உள்ள பாறை இடுக்குகளில்
கரை ஒதுங்கி இருந்ததாக திமூர் லாட் மாவட்ட போலீஸ் தலைவர் லீ ஸ்வீ சேக் தெரிவித்தார்.

உள்ளூரை சேர்ந்த அந்த நபர், தனது நண்பருடன் குளிப்பதற்காக அக்கடற்கரைக்கு சென்று இருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட அந்த நபரின் உடல், பிரேதப் பரிசோதனைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →