நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பத்தினர், தங்களது அன்புக்குரியவர்களைத் தேடும் நடவடிக்கை குறித்து விளக்கம் பெற நாளை விஸ்மா புத்ரா அதிகாரிகளைச் சந்திக்கின்றனர்.
நேபாளத்தின் ரசுவாகாதி–கெருங் எல்லைப் பகுதியில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து தெளிவான தகவல் வேண்டும் என்று குடும்பங்கள் கோருகின்றன.
மலேசிய ஒற்றுமை: குடும்பங்கள் நம்பிக்கை அமைப்பின் பேச்சாளர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் கூறுகையில், 11 பேர் கொண்ட ஸ்மார்ட் மீட்புக் குழுவை நேபாளத்துக்கு அனுப்பியது உள்ளிட்ட அரசாங்கத்தின் முயற்சிகளை குடும்பங்கள் பாராட்டுவதாகக் கூறினார்.
அதேவேளை, தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பகுதிகள், சீன–திபெத் தரப்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து கூடுதல் விளக்கம் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
நாளைய சந்திப்பில் ஸ்மார்ட், போலீஸ், ரசாயனத் துறை, காட் மாண்டுவிலுள்ள மலேசிய தூதரகம் மற்றும் தேசிய பதிவுத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.








