கடந்த ஏப்ரல் 17 மற்றும் 18 நாள் அன்று சொகுசு பேருந்து ஓட்டுநர் கையில் தொலைபேசி வைத்துக் கொண்டும் யாருடனோ உரையாடிக் கொண்டும் பேருந்தை ஓட்டிய குற்றச்சாட்டுக்காக அவருக்கு போலீசார் சமன் வழங்கியுள்ளனர்.
பேருந்தில் ஒரு பயணியாக தன்னை பிரகடன்ம் படுத்திக் கொண்டு பயணித்த அந்தப் போலீசார், ஓட்டுனரின் பின் சீட்டில் அமர்ந்துக் கொண்டு அந்த ஓட்டுனரின் அனைத்து குற்றங்களையும் பதிவு செய்துள்ளார். சாலையில் அவசர பகுதியில் பேருந்தை செலுத்தியது, இரட்டை கோடுகளில் மற்ற வாகனங்களின் முன் செல்லுதல் போன்ற குற்றங்களுக்கு அந்த ஓட்டுநர் போலீசாரின் ஹரிராய ஓப்ஸ் நடவடிக்கையின் போது கண்டுபிடித்துள்ளனர்.








