May 28, 2026
Thisaigal NewsYouTube
சீன அதிபரின் வருகை மலேசியாவின் வர்த்தக உறவை வலுப்படுத்தும் - அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

சீன அதிபரின் வருகை மலேசியாவின் வர்த்தக உறவை வலுப்படுத்தும் - அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.17-

மலேசியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துக் கொண்டு திரும்பியுள்ள சீன அதிபர் ஸீ ஜின்பிங் வருகையானது, நாட்டின் வர்ததக உறவை வலுப்படுத்தும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் வர்ணித்துள்ளார்.

மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் கடந்த 50 ஆண்டு காலமாக கட்டிக் காக்கப்பட்டு வரும் இரு வழி உறவின் வாயிலாக இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக ரீதியாக அணுக்கமான ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளது என்று அரசாங்கப் பேச்சாளரான டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

உலகளாவிய நிலையில் நிர்ணயம் இல்லாத பொருளாதார சூழலில் சீன அதிபரின் மலேசிய வருகையானது, ஸீ ஜின்பிங்கிற்கும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.

சீன அதிபரின் வருகையின் மூலம் சீனாவிற்கும், மலேசியாவிற்கும் இடையில் மொத்தம் 31 கருத்திணக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்