Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பணி ஒப்பந்தக் காலம் நீட்டிக்கப்படாதது குறித்து கவலை கொள்ளவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பணி ஒப்பந்தக் காலம் நீட்டிக்கப்படாதது குறித்து கவலை கொள்ளவில்லை

புத்ராஜெயா, ஜூலை,01-

நாட்டின் தலைமை நீதிபதி என்ற முறையில் தமது பதவி ஒப்பந்தக் காலத்தை அரசாங்கம் நீட்டிக்காதது குறித்து தாம் கவலைக் கொள்ளவில்லை என்று இன்று பணி ஓய்வு பெற்ற தெங்கு மைமூன் துவான் மாட் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் நீதித்துறை கட்டடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தெங்கு மைமூன், மலேசிய வரலாற்றில் முதலாவது பெண் தலைமை நீதிபதி மற்றும் நாட்டின் 16 ஆவது தலைமை நீதிபதி என்ற முறையில் சேவையாற்றியதை ஒரு சிறப்பான, உயர்வான அங்கீகாரமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

ஆறு ஆண்டுகள் நாட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளேன். இந்த 6 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தமது பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படாதது ஒரு பெரிய விஷயம் அல்ல என்று 65 வயதான தெங்கு மைமூன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →