Mar 17, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.எம் மாணவர்கள் கடும் காயத்திற்கு ஆளாகினர்
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.எம் மாணவர்கள் கடும் காயத்திற்கு ஆளாகினர்

Share:

எஸ்.பி.எம் தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்த இரண்டு மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்களும் படுகாயத்திற்கு ஆளாகினர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.53 மணியளவில் ஜோகூர், குளுவாங், காஹாங் தேசிய இடைநிலைப்பள்ளி அருகில் நிகழ்ந்தது என்று மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.

இந்த விபத்தில் Modenas Kriss மோட்டா​ர் சைக்கிளும், Naza Ria காரும் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

SMK Kahang இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 18 வயதுடைய அவ்விரு மாணவர்களும் Jalan Batu Pahat - Mersing சாலையில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார். கடும் காயங்களுக்கு ஆளான அவ்விரு மாணவர்களும் குளுவாங், Enche' Besar Hajah Khalsom மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு