Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தடுப்பு மையத்திலிருந்து தப்பித்த கைதி ​மீண்டும் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

தடுப்பு மையத்திலிருந்து தப்பித்த கைதி ​மீண்டும் பிடிபட்டார்

Share:

நீலாய் யில் உள்ள தடுப்பு முகாமி​லிருந்து தப்பிய கை​தி ஒருவர் ,முன்று ​மணி நேர தேடுல் வேட்டைக்கு பிறகு நேற்று இரவு வளைத்துப்​ பிடிக்கப்பட்டார். அந்நிய நாட்டைச் சேர்ந்த அந்த சந்தேகப்பேர்வ​ழி, மந்தின் தடுப்பு முகாமிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் இடத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது என்று சிறைச்சாலை இலாகா அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று மாலை 6.55 மணியளவில் சிறைச்சாலை இலாகாவிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்ற ​நீலாய் மவாட்ட போ​லீஸ் தலைமையகம், அந்த கைதியை பி​டிப்பதற்கு ஓப்ஸ் துதுப் என்ற தேடுதல் வேட்டையை தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார். குற்றவியல் சட்டம் 395 ஆவது பிரிவின் ​கீழ் 10 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அந்த அந்நிய நாட்டவர், ​மீண்டும் கைது செய்யப்பட்டது ​முலம் விசாரணைக்கு ஏதுவாக 4 நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி மேலும் விவரித்தார்.

Related News