கோலாலம்பூர், ஆகஸ்ட்.10-
சிலாங்கூர், கோலாலம்பூரில் போலியான அனுமதியுடன் இயங்கி வந்த 22 கேளிக்கை விடுதிகளில் நடத்தப்பட்ட ஓப் மேகா அதிரடிச் சோதனையில் 288 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் விடுதிப் பொறுப்பாளர்கள், ஊழியர்கள், 170 வாடிக்கையாளர்கள், 66 மியன்மார் நாட்டுப் பெண்கள் என அனைவரும் வெளிநாட்டினர் ஆவர் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் குறிப்பிட்டார்.
நேற்று இரவு 10.30 மணியளவில் நடத்தப்பட்ட இச்சோதனையின் போது, பணம், மதுபானங்கள், பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஊராட்சி மன்றங்களும், தீயணைப்புத் துறையும் இந்த நடவடிக்கையில் இணைந்து செயல்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றவியல் சட்டம், குடியேற்றச் சட்டம் உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.








