Sep 28, 2026
Thisaigal NewsYouTube
உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது
தற்போதைய செய்திகள்

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

Share:

வங்சா மாஜுவிலுள்ள உள்ள ஓர் உடம்புப் பிடி நிலையத்தில் “பாதுகாப்புப் பணம்” கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், பிகேஆர் கட்சியைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையை கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் பாடில் மர்சூஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 385 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 பிரிவு 233-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பாடில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டரசுப் பிரதேச குடியிருப்பாளர் பிரதிநிதிகள் குழுவில் உறுப்பினர்களாக உள்ள அந்த இருவரையும் பதவி விலகுமாறு பிகேஆர் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

போலீஸ் மற்றும் கட்சி ஆகியவற்றின் விசாரணைகளில் எவ்விதத் தலையீடும் ஏற்படுவதைத் தடுப்பதற்கு, அவர்களின் ராஜினாமாக்கள் அவசியமானவை என்று கூட்டரசுப் பிரதேச PKR தலைவர் அஸ்மான் அபிடின் தெரிவித்துள்ளார்.

Related News