Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கப்பல் மூழ்கியது, பத்து பேர் உயிர்த் தப்பினர்
தற்போதைய செய்திகள்

கப்பல் மூழ்கியது, பத்து பேர் உயிர்த் தப்பினர்

Share:

ஷாஹ் அலாம், ஜூலை 8-

செபாங், தஞ்ஜோங் ரு, கடப்பகுதியில் மேற்கை நோக்கி 2.1 கடல் மைல் தொலைவில் Mv KUMJIN சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதில் அதன் கேப்டன் உட்பட பத்து பேர் உயிர் தப்பினர். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.35 மணியளவில் நிகழ்ந்தது.

அந்த சரக்குக் கப்பலில் கீழ் தள கடைசி டேக்கில் துவாரம் ஏற்பட்டு, தண்ணீர் நுழையத் தொடங்கிதால் அந்த கப்பல் முழ்கத் தொடங்கியது.

இதன் தொடர்பில் ஓர் அவசர அழைப்பை அதிகாலையில் அந்த கப்பலிலிருந்து தாங்கள் பெற்றதாக மலேசிய கடல் சார் அமலாக்க ஏஜென்சியின் சிலாங்கூர் மாநில இயக்குநர் அகமது முஹைமின் சாலேதெரிவித்தார்.

இதன் காரணமாக கப்பலின் கேப்டன் உட்பட பத்து சிப்பந்திகள், கப்பலில் இருந்த உயிர்காப்பு படகின் மூலம் உயர் தப்பினர். எனினும் மோசமான வானிலையில் சிக்கிய அந்த 10 பேரை மீட்பதற்கு கடல்சார் அமலாக்க ஏஜென்சி, Perkasa 36 எனும் இயந்திரப் படகை அந்த இடத்திற்கு அனுப்பியதாக அவர் மேலும் கூறினார்.

53 வயதுடைய கேப்டன், 19 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்தோனேசிய மற்றும் மியன்மார் பணியாளர்கள் கடலிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அகமது முஹைமின் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்