Oct 11, 2026
Thisaigal NewsYouTube

போதைப் பொருள் கடத்தல் - 3 இந்திய இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போதைப் பொருள் கடத்தல் -  3 இந்திய இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை

கோலாலம்பூர், மே.06-

கறுப்புச் சந்தையில் விநியோகிப்பதற்காக லட்சக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருளைக் கடத்திய குற்றத்திற்காக மூன்று இந்திய இளைஞர்களுக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்தது.

அத்துடன் ஒவ்வாருவருக்கும் தலா 12 பிரம்படித் தண்டனை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

48 வயது S. யுவராஜா, 40 வயது R. கலைக்குமார் மற்றும் 38 வயது K. பார்த்தீபன் ஆகிய மூவருக்கும் எதிரான தண்டனை, அவர்கள் கைது செய்யப்பட்ட தினமான 2019 ஆம் ஆண்டு ஜுன் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்ஹார் அப்துல் ஹாமிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கார் இழுவை மற்றும் லோரி ஓட்டுநர்களான அந்த மூவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு 18 ஆம் தேதி மாலை 5.35 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் டேசா பண்டானில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் methamphetamine வகையைச் சேர்ந்த 32 கிலோ எடை கொண்ட போதைப் பொருளைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →