Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பள்ளி கழிப்பறை சீரமைப்பில் முறைகேடா ? எஸ்.பி.ஆர்.எம்  இடம் முகார் செய்வீர்
தற்போதைய செய்திகள்

பள்ளி கழிப்பறை சீரமைப்பில் முறைகேடா ? எஸ்.பி.ஆர்.எம் இடம் முகார் செய்வீர்

Share:

பள்ளிக் கழிவறை பழுதுபார்க்கும் குத்தகையாளர்களை நியமிப்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

பள்ளியின் கழிவறை பழுதுபார்க்கும் குத்தகையாளர்களை அமைச்சு கண்காணித்து வருவதாகவும், தற்போது வரையில் எந்தவித புகாரும் தமது தரப்பு பெறவில்லை எனவும் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

சீரமைப்புப் பணிகள் ஏறத்தாழ 80 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகவும், நிர்ணயித்தபடி அனைத்து பள்ளிகளிலும் கூடிய விரைவில் நிறைவடைந்து விடும் எனவும் அவர் கூறினார்.

முன்னதாக, கழிப்பறை சீரமைப்புப் பணிகளுக்காக ஒவ்வொரு பள்ளிக்கும் கல்வி அமைச்சு 70 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கி இருந்தது. னைந்த நிதி முறையாக செலவிடப்படுமா அல்லது குத்தகையாளர்களால் முறையாகக் கையாளப்படுமா என பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யங் சைஃபுரா ஓத்மான் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், செய்தியாளர்களிடம் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் இந்த விளக்கத்தைத் தந்தார்.

Related News