Sep 28, 2026
Thisaigal NewsYouTube
வீட்டிலிருந்தே பணி புரியும் திட்டம் குறித்து பினாங்கு ஆலோசனை
தற்போதைய செய்திகள்

வீட்டிலிருந்தே பணி புரியும் திட்டம் குறித்து பினாங்கு ஆலோசனை

Share:

பட்டர்வொர்த், மார்ச்.29-

மேற்காசிய மோதல் காரணமாகச் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக, அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணி புரியும் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பினாங்கு மாநில அரசு வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளது. இத்திட்டம் குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயாவ், இது தொடர்பான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறினார். தனியார் துறையில் அனைத்துப் பிரிவுகளுக்கும் இந்த முறை ஏற்றதாக இருக்காது என்பதால், தற்போதைய சூழலில் பொதுத் துறைக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News