Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அந்த அறிக்கை புக்கிட் அமானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

அந்த அறிக்கை புக்கிட் அமானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Share:

மது போதையில் வாகனத்தை செலுத்திய போலீஸ் அதிகாரி, தன்னை வழிமறித்து சோதனை செய்த போலீஸ் அதிகாரிகளிடம் ஆபாச சைகை காட்டியது தொடர்பான விசாரணை அறிக்கை, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஸாம் ஹாலிம் ஜமலுடின் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு புக்கிட் அமான் சட்டத்துறை பிரிவிடம் அறிக்கை சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜுன் 17 ஆம் தேதி 35 வயதுடைய அந்த போலீஸ் அதிகாரி, கோலாலம்பூர், ஜாலான் செராஸில் வாகனத்தை செலுத்திய போது, போலீஸ் அதிகாரிகளிடம் ஆபாச சேட்டைப் புரிந்ததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாக ஸாம் ஹாலிம் ஜமலுடின்தெரிவித்தார்.

Related News