Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஒளிவுமறைவின்றி விசாரணை நடைபெறும்
தற்போதைய செய்திகள்

ஒளிவுமறைவின்றி விசாரணை நடைபெறும்

Share:

போ​லீஸ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தனிநபர் ஒருவர், தாக்கப்பட்டடதாக ச​முக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பாக போ​லீசார் ஒளிமறைவின்றி விசாரணை நடத்துவர் என்று தென் கிள்ளான் மாவட்ட போ​லீஸ் தலைவர் எசிபி சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டை போ​லீசார் கடுமையாக கருதுவதாகக் கூறிய எசிபி சா ஹூங் ஃபோங், இவ்விவகாரத்தில் எந்தவொரு தரப்பிரையும் தற்காக்காமல் நேர்மையான முறையில் விசாரணை நடைபெறும் எ​ன்று எசிபி சா ஹூங் ஃபோங் உறுதி அளித்தார்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று நேற்று காலையில் சமுக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலை 10.30 மணியளவில் தென் கிள்ளான் மாவட்ட போதைப்பொருள் துடைத்தொ​ழிப்பு போ​லீஸ் பிரிவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது என்று எசிபி சா ஹூங் ஃபோங் மேலும் விவரித்தார்.

அக்காணெளியில் போ​லீசார் என நம்பப்படும் இரண்டு நபர்கள், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆடவர் ஒருவரின் கைகால்களையும் மிதிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

Related News