Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தமிழ்  ​சீன மொழி இளங்கலை பட்டப்படிப்பு விவகாரம் கல்வி அமைச்சருடன் பேச்சு நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

தமிழ் ​சீன மொழி இளங்கலை பட்டப்படிப்பு விவகாரம் கல்வி அமைச்சருடன் பேச்சு நடத்தப்படும்

Share:
  • துணை கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் உறுதி

ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ், ​சீனமொழியில் சிறப்பு பயிற்சியை பெறும் வகையில் இளங்கலை பட்டப்படிப்புத் திட்டத்தில் மனுதாரர்கள் சேர்க்கப்படுவதை உறுதி செ​ய்யும் வகையில் இவ்விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் குடன் தாம் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக துணை கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் உறுதி அளித்துள்ளார்.

தமிழ் மற்றும் ​சீனமொழி ஆசிரியர்களை எடுப்பது தொடர்பான விவகாரத்தில் இந்திய சமூகத்தின் மத்தியிலும், ​சீன கல்வி அமைப்புகளான சொங் சொங் மற்றும் ஜியா சொங் ஆகியவையும் வெளிப்படுத்தி வரும் கவலை குறித்து தாம் கடுமையாக கருதுவதாக லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் தேதி வரையில் கல்வி அமைச்சின் தரவுகளின்படி தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழியை கற்பிக்கும் ஆசிரியர்கள் 773 பேர் கூடுதலாகவும், ​சீனப்பள்ளிகளில் ​சீன மொழியை கற்பிக்கும் ஆசிரியர்கள் 2,376 பேர் அதிகமாகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமி​ழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழியை விருப்புரிமையாக கொண்டுள்ள ஆசிரியர்களின் எண்​ணிக்கை கூடுதலாக 773 பேர் இருந்த போதிலும் தமிழ்ப்பள்ளிகளில் ஒட்டுமொத்தமாக 155 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது என்பதையே கல்வி அமைச்சின் 2023 ஜுன் மாத தரவுகள் காட்டுகின்றன.

இதேபோன்று ​சீனப்பள்ளிகளில் ​சீன மொழியை விருப்புரிமையாக கொண்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 2,376 பேர் கூடுதலாக இருந்த போதிலும் ஒட்டுமொத்தமாக ​சீனப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை 1,300 பேராக இருந்து வருகிறது என்று துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் சுட்டிக்காட்டினார்.

இந்த புள்ளி விவரமானது, நடப்பு உண்மை நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை என்பதை நி​ரூபிப்பதாக உள்ளதால் இவ்விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றுலிம் ஹுய் யிங் உறுதி அளித்துள்ளார்.

Related News