கோலாலம்பூர், நவம்பர்.05-
கிக் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ சந்தா கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படுவதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் விளக்கம் அளித்துள்ளார்.
கிக் தொழிலாளர்களுக்கு அனுகூலங்களை ஏற்படுத்த வல்ல 2025 ஆம் ஆண்டு கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதிலும் இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
கிக் தொழிலாளர்களுக்கு சந்தா பிடித்தம் செய்யப்படுவதற்கு நிறுவனங்களை இணைப்பதில் ஏற்படக்கூடிய அனைத்து செலவினங்களையும் சொக்சோவே முழுமையாக ஏற்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.








