நாட்டில் வரும் வாரத்திற்கான அனைத்து வகையான எரிபொருள் விலைகளிலும் எந்தவித மாற்றமும் இல்லை என நிதி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இதன்படி, ரோன் 97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரிங்கிட் 35 சென் ஆகவும், மானியமற்ற ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரிங்கிட் 72 சென் ஆகவும் நீடிக்கிறது.
அதேவேளையில், டீசல் விலை தீபகற்ப மலேசியாவில் லிட்டருக்கு 4 ரிங்கிட் 67 சென் என்ற விலையிலும், கிழக்கு மலேசியாவில் மானிய விலையான 2 ரிங்கிட் 15 சென் என்ற அளவிலும் மாற்றமின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








