பணி ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்தும் திட்டம் குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார். அனுபவமிக்க பணியாளர்களைத் தக்க வைப்பதற்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தச் சீராய்வின் முடிவில், இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது. அத்துடன், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும், நாட்டு நலனையும் கருத்தில் கொண்டு ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.








