கோத்தா கினபாலு, ஆகஸ்ட்.10-
மர்மமான முறையில் உயிரிழந்த 13 வயது மாணவி ஸாரா கைரினா மகாதீரின் புதைக்கப்பட்ட உடல், மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாம் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது! சபாவிலுள்ள குயின் எலிஸபெத் I மருத்துவமனையில் நடைபெறும் இந்தப் பிரேதப் பரிசோதனையில், செர்டாங் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் வல்லுநர்களும் இணைந்துள்ளனர்.
விசாரணையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தவும், தவறான குற்றச்சாட்டுகளைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஸாரா கைரினாவின் தாயார் நொராய்டா லாமாட் சார்பாக வழக்கறிஞர் ஹமிட் இஸ்மாயில் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனை முடிந்ததும் உடல் மீண்டும் அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








