Aug 6, 2026
Thisaigal NewsYouTube
2 நிமிடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது
தற்போதைய செய்திகள்

2 நிமிடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது

Share:

கோலத்திரெங்கானு, டிச. 27

திரெங்கானு மாநிலத்தில் பொது மக்களின் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்றத்திற்கு ஆளான முதலாவது கல்வத் குற்றவாளியான 42 வயது நபருக்கு 6 பிரம்படித் தண்டனை , 2 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

தண்டனை நிறைவேற்றத்தின் போது அந்த கல்வத் குற்றவாளி கத்தி, கதறவில்லை. மாறாக, அமைதியாக காணப்பட்டார்.

திரெங்கானு மாநில ஷரியா சட்டத்திற்கு ஏற்ப தண்டனை நிறைவேற்றத்தின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எந்தவொரு அசம்பாவிதமின்றி இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக போலீஸ் துறை அறிவித்துள்ளது.

இதனை நேரில் பார்ப்பதற்கு பொதுமக்களில் 90 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

தண்டனை நிறைவேற்றத்திற்கு பிறகு அந்த கல்வத் குற்றவாளி சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்கு மாராங் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு