போர்ட்டிக்சன், ஜனவரி.08-
கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி போர்ட்டிக்சன், ஜாலான் பெக்கான் லுகுட்டில் பாராங்கை ஆயுதமாகப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் போலீசார் மேலும் ஒரு நபரைக் கைது செய்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரவு 8.05 மணியளவில் போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் மஸ்லான் உடின் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய பத்து பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் எழுவர் பழைய குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.








