Mar 1, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலின் தாக்குதலுக்குக் கண்டனம்: நாடாளுமன்றத்தில் நாளை சிறப்புத் தீர்மானம் -பிரதமர் அன்வார் இப்ராஹிம் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலுக்குக் கண்டனம்: நாடாளுமன்றத்தில் நாளை சிறப்புத் தீர்மானம் -பிரதமர் அன்வார் இப்ராஹிம் திட்டவட்டம்

Share:

புத்ராஜெயா, மார்ச்.01-

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வன்முறைத் தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில், நாளை மலேசிய நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. அனைத்துலகச் சட்டங்களை மீறி இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இந்த மாந்தநேயமற்றச் செயலை ஒருமனதாகக் கண்டிக்க, எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் தாம் கோரியுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இந்தத் தாக்குதல் ஒரு தொடர்ச்சியான அநாகரீகச் செயல் என்று சாடினார். அத்துடன், இந்தத் தாக்குதலில் ஈரானின் உயரியத் தலைவர் Ayatollah Ali Khamenei கொல்லப்பட்டதற்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். ஈரானின் முக்கிய இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிப்பதோடு, உலக அமைதியைப் பேண இந்தத் தீர்மானம் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News