Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கோர விபத்தில் இருவர் மான்டனர்.
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் இருவர் மான்டனர்.

Share:

இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் உயிர் இழந்தனர். இச்சம்பவம் இன்று காலை 3 மணி அளவில் புக்கிட் மெர்தாஜாம் தாமான் ஶ்ரீ ரம்பாயில் நிகழ்ந்தது. அவர்கள் பயணித்த கார் எதிரே வந்த லோரியுடன் எதிரும் புதிருமாக மோதியதில் இருவரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலே மான்டனர். 37 மற்றும் 26 வயதுடைய இருவர் இச்சம்பவத்தில் உயிர் இழந்ததாக போலிசார் அடையாலம் கூறினர். காரின் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக்கொண்ட அந்த இருவரையும் மீட்பதற்கு தீயணைப்பு மீட்பு படையினரின் உதவியை போலிசார் நாடினர். இடிபாடுகளுக்கிடையில் சிக்கியவர்களைச் சிறப்பு சாதனங்கள் கொண்டு அவர்களின் உடல்களை மீட்டனர்.

Related News