Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் ஆட்சிக்குழு சீரமைக்கப்படாது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் ஆட்சிக்குழு சீரமைக்கப்படாது

Share:

பெட்டாலிங் ஜெயா , ஆகஸ்ட் 13-

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவை சீரமைக்கும் திட்டம் எதனையும் தாம் கொண்டிருக்கவில்லை என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

சில முன்னேற்றங்கள் தேவைப்பட்டாலும் தற்போதைய ஆட்சிக்குழுவினர் சிறப்பாக செயல்படுகின்றனர் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்களின் இலாகாக்களுக்கு ஏற்ப மக்களுக்கான சேவையை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மந்திரி பெசார் வலியுறுத்தினார்..

இன்று ஷா ஆலாமில் டெவான் ராஜா மூட மூசா-வில் 2024 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில மக்களின் டியூஷன் திட்டத்தை தொடக்கிவைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் சீரமைப்பு நடைபெறவிருப்பதாக ஆருடம் தன்மையில் செய்தி வெளிவந்திருப்பது நல்லதுதான். அப்போதுதான் நடப்பு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு ஓர் உந்தும் சக்தியாக இருக்கும் என்று அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை