டாக்டர் சத்யாவதி அழகிரிசாமியை ஆலோசகராக கொண்டு வெற்றிநடை போட்டுவரும் வம்சம் கருவுறுதல் நிலையமான Vamsam Fertility And Health Care ஏற்பாட்டில் பெண்களுக்கான உலகத் தரம் வாய்ந்த Femi 9 Sanitary Napkin வர்த்தக கருத்தரங்கம் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரையில் கோலாலம்பூர், Sentul Curry House Event Hall - யில் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 7 வருடங்களாக Vamsam Fertility And Health Care - ரின் ஆலோசகராக இருந்துவரும் டாக்டர் சத்யாவதியின் பெரும் முயற்சியினால் இக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவினால் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட Femi 9 Sanitary Napkin- யின் செயல்முறை விளக்கம் நேற்று அளிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் கோமதி Femi 9 Sanitary Napkin வர்த்தகத்தின் சிறப்பு மற்றும் அதன் விற்பனையின் மூலம் பெறக்கூடிய கூடுதல் வருமானம் உட்பட அந்த விடாய்க்கால அணையாடை குறித்து அரிய தகவல்களை வழங்கினார்.
சுமார் 50 பேர் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் வருகை புரிந்திருந்த ஒவ்வொருவரும் Femi 9 Sanitary Napkin பயன்படுத்தி கிடைக்கபெற்ற பலன்களை பகிர்ந்து கொண்டனர்.
மாதவிடாய்க்கு முன் வெள்ளை வெளியேற்றம், அரிப்பு, மூலம் நோய் ஆகிய பிரச்னைகளில் ஒவ்வொரு மாதமும் அவதியுறும் பெண்கள் இந்த Femi 9 Sanitary Napkin பயன்படுத்தி பலன் பெற்றிருப்பதாக டாக்டர் சத்யா கூறினார்.
இந்த Femi 9 Sanitary Napkin பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பெரும் பங்காற்றுகிறது என்பது இக்கருத்தரங்கின் வாயிலாக தெரியவந்துள்ளது.
காயம் ஏற்பட்டிருக்கும் இடங்களில் பாண்டி லைனர் ஒட்டுவதால் சில மணி நேரத்திற்குள் புண் மறைந்துவிடுகின்றது. அடுத்தக்கட்ட நகர்வாக மலேசியாவில் இருக்கும் அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று இதுக்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் சத்யாவதி திசைகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.








