Sep 29, 2026
Thisaigal NewsYouTube
பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து
தற்போதைய செய்திகள்

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.08-

பெட்டாலிங் ஜெயா, சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று நண்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிற்பகல் 1.32 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்தத் தீயை அணைக்கும் பணியில் டாமன்சாரா, பூச்சோங் உட்பட ஐந்து தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 34 வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டதாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

முதலில் தளவாடத் தொழிற்சாலை எனத் தகவல் வெளியான நிலையில், பின்னர் அது வாகன உதிரிபாகத் தொழிற்சாலை என உறுதிச் செய்யப்பட்டு, தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தன.

Related News