கோல சிலாங்கூர், டிசம்பர்.13-
இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்று கடிமையாகச் சேதமுற்றது. இந்தச் சம்பவம் கோல சிலாங்கூர், பண்டார் புஞ்சாக் ஆலாம், ஆலாம் ஜெயா தொழிற்பேட்டைப் பகுதியில் நிகழ்ந்தது.
இந்தத் தீச் சம்பவத்தில் எந்தவோர் உயிர்ப்பலி சேதங்கள் ஏற்படவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப்படையின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
தீயை அணைக்கும் பணியில் பெஸ்தாரி ஜெயா, காப்பார், கோத்தா அங்கேரி, ரவாங், பத்து ஆராங் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கொழுந்து விட்டு எரிந்த தீ பிற்பகல் 1.30 மணியளவில் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் விவரித்தார்.








