கெடா மாநில மக்களுக்கு தாம் எதிரி அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார். கெடா மாநில மக்களின் மேம்பாட்டிற்கு உதவவே தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெடா மாநிலத்தில் தம்முடைய மடானி மலேசியா ஹரிராயா திறந்த இல்ல பொது உபசரிப்பு நடத்தப்படுவதற்காக மக்கள் தம்மை ஆதரிக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்ளவில்லை. மாறாக, கெடா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்காக தமது தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கும்படி கெடா மாநில மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
கெடா மாநில அரசாங்கத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட போதிலும் மாநிலத்தின் மேம்பாட்டிற்காக மத்திய அரசாங்கம் கொண்டுள்ள திட்டத்திற்காக வருகின்ற கெடா மாநில சட்டமன்றத் தேர்தலில் தமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


